துருக்கியின் தென்கிழக்கு மார்டின் மாகாண மாணவர்கள், இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள கைவிடப்பட்டவர்களுக்கு தங்கள் நிதியுதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு கைவிடப்பட்ட உடன்பிறப்புகள் உள்ளனர் என்று பெயரிடப்பட்ட ஒரு பிரசாரத்தின் பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நிதியுதவி
இந்தநிலையில் ஹாசி சுபியே போலன்மேஸ் இமாம் ஹாடிப் மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் மாதத்திற்கு கிட்டத்தட்ட 5,500 துருக்கிய லிராக்களை (292 டொலர்களை) சேமித்து 22 கைவிடப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
சூடான், இலங்கை, அல்பேனியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் தேவையுடையவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.