Home உலகம் பாகிஸ்தானில் மக்கள் மிகுந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் அவதி

பாகிஸ்தானில் மக்கள் மிகுந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் அவதி

by Jey

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் முழுவதும் இன்று திடீர் மின் தடை ஏற்பட்டது. காலை 7.34 மணியளவில் தேசிய மின் பகிர்மான கட்டமைப்பில் மின்விநியோகத்தில் ஏற்ற இறக்கம் (Frequency Variation) ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த மின்பகிர்மான அமைப்பும் தோல்வியடைந்தது.

இதனால், நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. குறைவான பயன்பாடு காரணமாக எரிபொருள் செலவை மிச்சப்படுத்த நேற்று இரவு மின் பகிர்மான கட்டமைப்பின் சில பகுதிகளை அதிகாரிகள் நேற்று இரவு நிறுத்தியுள்ளனர்.

இன்று காலை அந்த அமைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தபோது மின்விநியோகத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தில் மின்பகிர்மான அமைப்பு தோல்வியடைந்து நாடு முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது.

இந்த மின் தடையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மின் தடையால் பல்வேறு நகரங்களில் குடிநீர் விநியோகம் உள்பட அத்தியாவசிய சேவைகள் தடைபட்டது. மின் விநியோகத்தை மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

related posts