கனடாவின் டொரன்டோ பெரும்பாக பகுதியில் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே வீடுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதுடன் சில வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்ட அடிப்படையில் கும்பல் ஒன்று இவ்வாறு பாரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டின் உண்மையான உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே வீடுகள் இவ்வாறு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டொரன்டோ பெரும்பாக பகுதியில் குறைந்த பட்சம் 30 வீடுகள் இவ்வாறு மோசடியான முறையில் விற்பனை அல்லது அடகு வைக்கப்பட்டுள்ளது. தனியார் புலனாய்வு நிறுவனம் ஒன்றினால் இந்த மோசடி சம்பவம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு முதல் ஐந்து வரையிலான குழுக்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த மோசடிகள் எவ்வாறு இடம்பெற்றன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.