கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் பனிப்புயல் தொடர்பில் அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வாரம் முழுவதிலும் இந்த பனியுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
றொரன்றோ நகரம் மற்றும் தென் ஒன்றாரியோ பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு வலுவுடன் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸில் நிலை கொண்டுள்ள தாழமுக்க நிலை ஒன்றாரியோவை நோக்கி நகர்வதனால் கடும் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் 15 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.