Home இலங்கை ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

by Jey

தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள தீர்வுக்கான பேச்சுக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்.

இதைச் சம்பந்தனிடம் நான் நேரில் தெரிவித்துள்ளேன். அதேவேளை, நாட்டில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு மட்டும் பிரச்சினைகள் இல்லை.

சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையகத் தமிழ் மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அந்தத் தரப்புக்களுடனும் பேச்சு நடத்தி பிரச்சினைகளைத் தீர்த்துவைப்போம் என்று ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த நல்ல கருமங்களை எவரும் குழப்பியடிக்க இடமளிக்கமாட்டோம்.

இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். சமாதானம் மலர வேண்டும். ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

related posts