பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஓர் பகுதி பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டாகு குளம் பகுதியே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கு குளம் அமைந்துள்ள சுமார் 1.8 மில்லியன் ஹெக்டயார் பரப்பு இவ்வாறு பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின சமூகத்தின் பாதுகாக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஆறு பிரதிநிதிகள் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
சுற்றுலா, ஆய்வு போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், இந்தப் பகுதியில் சுரங்கத் தொழில்களில் ஈடுபடுவதற்கு வரையறுக்கப்பட்ட அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.