நமக்கு பூமியின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே தெரியும். ஆனால் பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பது தெரியுமா? இதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதற்கு பெயர் கோர் ( Core) அதாவது மையப்பகுதி என்று பெயர் வைத்தனர்.
நம்முடைய பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கும் இந்த கோர் பகுதிக்கும் பெரும் சம்பந்தம் உள்ளது என்றால் பலர் நம்பமாட்டார்கள். குறிப்பாக எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் போன்றவை ஏற்படுவது இந்த கோர் பகுதி காரணமாகவே ஆகும்.
நாசா விஞ்ஞானிகள் இதுபற்றி கண்டிபிடிக்கும்போது பூமியை மூன்றாக பிரித்தார்கள். முதல் பகுதியான நாம் வாழும் பகுதி கிறஸ்ட் என்றும் இரண்டாவது மேன்டில் என்றும் மூன்றாவது மையப்பகுதி கோர் என்றும் அழைக்கிறார்கள். இந்த கோர் பகுதி தற்போது பூமியின் சுற்றுப்பாதைக்கு நேர் எதிராக சுற்றுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில்,பூமியின் உள் மையம், சூடான மாக்மா அதன் வழக்கமான சுழற்சியை நிறுத்தி, எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.