Home கனடா கனடாவில் வங்கி வட்டி வீதம் உயர்வு

கனடாவில் வங்கி வட்டி வீதம் உயர்வு

by Jey

கனடாவில் மீண்டும் வங்கி வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கனேடிய மத்திய வங்கி இன்றைய தினம் 0.25 வீதத்தினால் உயர்த்தியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையில் எட்டு தடவைகள் வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பல தசாப்பங்களில் இல்லாத அளவிற்கு கனடாவில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது.

இதன்படி வங்கி வட்டி வீதம் 4.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டின் பின்னர் தற்பொழுது வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts