Home உலகம் உலகின் மிக விரைவான வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியா

உலகின் மிக விரைவான வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியா

by Jey

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறையின் பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை பிரிவின் சர்வதேச பொருளாதார கண்காணிப்பு கிளையின் தலைவராக இருந்து வருபவர் ரஷீத். உலக பொருளாதார சூழல் மற்றும் பலன்கள் 2023 அறிக்கையை அவர் வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, தெற்கு ஆசிய நாடுகளில் அதுவும் ஜி-20 உறுப்பு நாடுகளில், வளர்ச்சிக்கான பலன்களை அடைவது சவாலாக உள்ளபோதிலும், இந்திய பொருளாதார வளர்ச்சியானது தொடர்ந்து வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒரு பிரகாசம் நிறைந்த நாடாக தற்போது உள்ளது என கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜி.டி.பி.) 5.8 அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி ரஷீத் பேசும்போது, உலகின் மிக விரைவான வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வரும் 2024-ம் ஆண்டில் 6.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கூறினார்.

related posts