கனடாவில் கோவிட் பெருந்தொற்று பரவுகை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் உப திரிபுகளில் ஒன்றான “Kraken” இன் தாக்கத்தை நாம் எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் கய்ரான் மோர் தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோவில் இந்த புதிய திரிபு தாக்கம் அதிகரிக்கலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நோய்த் தாக்கம் பாரதூரமானதாக காணப்படாவிட்டாலும் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு இந்த தொற்று பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.