கனடாவில் தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2021ம் ஆண்டின் பின்னர் தற்பொழுது தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தொழில் வாய்ப்புக்கள் சுமார் 21000த்தினால் குறைவடைந்துள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளில் அதிகளவான தொழில் வாய்ப்புக்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.