திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமலஹாசன், தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கைமூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மதச் சார்பற்ற ஜனநாயகத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரது கட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த, மதவெறித் தீயை அணைக்க, அனைவரும் ஒன்றுசேர வேண்டியது எப்படி முக்கியமோ, அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும். வாழ்த்துகள்.