கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இ்ன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த போட்டியில் 7-5, 6-1, 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆகியோர் மோதுகின்றனர்