Home இலங்கை 22ஆவது மறுசீரமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து, 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும்

22ஆவது மறுசீரமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து, 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும்

by Jey

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், நாடாளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினராலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

‘’நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்ற அடிப்படையில் தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த நான் கட்டுப்பட்டுள்ளேன். அந்தவகையில் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் கடந்த 37 ஆண்டுகளாக எமது சட்டப் புத்தகத்திலும் அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து, 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும். அப்படி இல்லையெனில், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறை

related posts