Home இலங்கை சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சி

சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சி

by Jey

அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் இலங்கையின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

அதில் ஒரு சுதந்திர வாக்கெடுப்பு கோரியும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,679 ஆக இருக்கலாம் என்றும் அந்த அமைப்புகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

சுதந்திரத்திற்குப் பின்னர் அடுத்தடுத்து சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்களின் கீழ் தொடர்ச்சியான ஒடுக்குமுறை மூலம் இலங்கை அரசால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்ற விடயங்களில் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல பரந்த உலகிற்கும் கவலை தருவதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

எனவே ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள்.
சுதந்திர வாக்கெடுப்பு

ஈழத் தமிழர்களின் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தீர்மானிக்க சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்

related posts