Home இந்தியா விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

by Jey

ஆரணி நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாமீனில் வந்த மாவட்ட செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாவட்ட செயலாளர் கைது ஆரணி கோட்டை மைதானம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த இடத்தின் பக்கத்துக் கடைக்கு சுவர் ஓட்டையிட்டதாக ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு டவுன் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் இருதரப்பினரை இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சப்-இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசி கண்டித்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வேலூர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கடந்த 8-ந் தேதி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

related posts