ஆவடி அடுத்த வீராபுரம், மோரை, நியூ காலனியை சேர்ந்தவர் சுமதி (வயது 35). இவருடைய கணவர் சுப்புராயல், 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
சுமதி, ஆவடியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் தயாளன் (வயது 15). இவர் திருமுல்லைவாயல் எஸ்.எம். நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தயாளன் தனது தாயாரிடம் நீண்ட நாட்களாக செல்போன் வாங்கி தரும்படி கேட்டு அடம்பிடித்து வந்தார்.
அதற்கு சுமதி, “தற்போது 10-ம் வகுப்பு படிக்கிறாய். நன்றாக படி. பின்னர் செல்போன் வாங்கி தருகிறேன்” என்று கூறியதாக தெரிகிறது.
தற்கொலை மிரட்டல் இதை ஏற்றுக்கொள்ளாத தயாளன், நேற்று மாலை 5 மணியளவில் திடீரென வீராபுரம் அருகே கிருஷ்ணா கால்வாய் ஓரம் சுமார் 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் சுமார் 50 அடி உயரத்தில் ஏறி நின்று செல்போன் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.