உலக நாடுகளுக்கு உணவு பொருட்களை அள்ளி வழங்கும் அட்சய பாத்திரம் போன்ற நிலவளங்களை தன்னகத்தில் வைத்துள்ள உக்ரைன் பல்வேறு வளங்களை கொண்டுள்ளது.
எனினும், சோவியத் ரஷியா உடைந்த பின்னர், எஞ்சியிருக்கும் நாடுகளில் ஒன்றாக உக்ரைனும், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டது.
இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு தீர்வு ஏற்படுவதற்கு போர் யுக்தியை ரஷியா கையிலெடுத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான போரை ரஷியா தொடுத்துள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்பு, உக்ரைனுக்கு உதவும் நோக்கில், அதேவேளையில் ரஷிய தாக்குதலை நிறுத்தும் வகையில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கீவ் நகருக்கு புறப்பட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, ஜான்சனுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது. உக்ரைனுக்கு ராணுவ படைகளை புதின் அனுப்புவதற்கு முன்பு, ஜான்சனை தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார்.