3போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்தியாவுக்கு சுற்றுப்பயாணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ரோகித் தலமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் தான் எடுத்தது.
இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியும் நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
இறுதியில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 30 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினர். மேலும் இந்த ஆட்டத்தில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.