Home இலங்கை படித்த புத்திஜீவிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பெரிய தடை

படித்த புத்திஜீவிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பெரிய தடை

by Jey

ஊழியர்களின் சம்பளத்தின் அடிப்படையில் அதிகளவில் வரி அறிவிடப்படுவதன் காரணமாக எதிர்காலத்தில் பலர் நாட்டை விட்டு வெளியேறலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே கடந்த வருடத்தில் முதல் 8 மாதங்களில் எட்டு லட்சம் பேர் கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளதுடன் அவர்களில் ஆறு லட்சம் பேர் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வது 136 வீதமாக அதிகரித்துள்ளது.

கல்வி கற்பதற்காக கடந்த ஆண்டு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு பல்லைக்கழகங்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக பெரும் தொகை பணத்தை நாடு இழந்துள்ளது.

இவ்வாறு படித்த புத்திஜீவிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பெரிய தடையாக அமையும். இதனை தடுக்க அரசாங்கம் துரித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

related posts