Home கனடா யோர்க் பிராந்தியத்தில் இடம்பெற்ற விபத்தில 2 பேர் பலி

யோர்க் பிராந்தியத்தில் இடம்பெற்ற விபத்தில 2 பேர் பலி

by Jey

கனடாவின் யோர்க் பிராந்தியத்தின் விட்த்சேர்ச்-ஸ்டோப்வில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டொயோட்டா கொரோலா ரக வாகனமொன்றும் மேர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொரோலா ரக வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் இருந்தால் அதனை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

related posts