றொரன்டோவில் 1.3 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்களுடன் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து 150,000 டொலர் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி முதல் இந்த போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கொக்கேய்ன், ஹெரோயின், கிறிஸ்டல் மெத் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.