கனடிய முதலீட்டாளர்கள் சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் காலநிலை தொடர்பான பொறுப்புக்களை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Investors for Paris Compliance (IPC) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலையை பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமை அளித்து முதலீடுகளை செய்யும் கனேடிய முதலீட்டாளர்கள் எத்தனை பேர் என்பது கேள்விக்குறியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காபன் வெளியீடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் அனேக முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.