மார்க்கம் பகுதியில் இரண்டு மாத குழந்தை ஹோட்டல் ஒன்றில் படு காயமடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
போலீசார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Woodbine Avenue பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இரண்டு மாதமான குழந்தையொன்று படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை அதே ஹோட்டல் அறையிலிருந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைக்கும் குறித்த நபருக்கும் இடையிலான உறவு என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
போலீஸ் அவசர பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
குழந்தையின் காயங்களுக்கு சந்தேக நபரை பொறுப்பு என்பதற்கான ஆதாரங்களுடன் குறித்த நபரை கைது செய்ததாக யோகாந்திய பொடிசார் தெரிவிக்கின்றனர்.