Home உலகம் உலகம் எதிர்கொள்ள கூடிய பெரிய சவால்களை பற்றி பேசுவதற்கான முயற்சி

உலகம் எதிர்கொள்ள கூடிய பெரிய சவால்களை பற்றி பேசுவதற்கான முயற்சி

by Jey

அமெரிக்காவுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், அமெரிக்காவுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் உடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த திட்ட தொடக்கங்கள் ஆனது, அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறையே தங்களது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு அளித்த வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. இந்த நட்புறவு அத்தியாவசியம் வாய்ந்தது.

உலகம் எதிர்கொள்ள கூடிய பெரிய சவால்களை பற்றி பேசுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். நாம் தற்போது, உணவு அல்லது எரிசக்தி அல்லது சுகாதார பாதுகாப்பு, பருவநிலை நெருக்கடி என ஒரு வெளிப்படையான மற்றும் திறந்த நிலையிலான, வளம் சார்ந்த விசயங்களை பற்றி பேசும்போது, பசிபிக் அல்லாத, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நட்புறவு இல்லாமல் பணியாற்றுவது என்பது முடியாதது என்று கூறியுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் பிரதமர் மோடி கூறும்போது, நம்பிக்கை, சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான ஒரு நல்ல சக்திக்கான கூட்டுறவு இது என விவரித்து உள்ளார் என்றும் அமெரிக்க மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

அதனால், குவாட் உச்சி மாநாட்டுக்கு பின்பும் மற்றும் ஜி-20 மாநாட்டுக்கான இந்தியாவின் தலைமைத்துவம் என இந்தியா ஒரு சர்வதேச சக்தியாக உருவெடுப்பதற்கு ஆதரவளிப்பதே உண்மையில் எங்களது செயல்திட்ட விருப்பத்தில் உள்ள விசயம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

related posts