குல்தீப் யாதவ் வங்காளதேசத்தில் டிசம்பரில் நடந்த தொடரில் அவர் விளையாடிய ஒரே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
அவர் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் மேட்ச்-வின்னிங் ஸ்பெல்களுடன் அதைத் தொடர்ந்தார்.
மேலும் அடுத்த வாரம் நாக்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவை நீக்கிய பிறகு உத்தரப்பிரதேச அணியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன்.
கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார். அவர் வீசும் திசையும் நன்றாக உள்ளது. முன்பை விட இப்போது பந்து அதிகமாக ஸ்பின் ஆகிறது.