றொரன்டோ மற்றும் றொரன்டோ பெரும்பாக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றாடல் நிறுவனம் இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிக கடுமையான குளிரை உணர நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் செல்வோர் முடிந்தளவு தங்களை குளிர் ஆடைகளினால் மறைத்துக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு வெப்பநிலை மறைப் பெறுமதியில் பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமை குளிரான காலநிலையினால் வீடற்றவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.