ஒன்றாரியோ மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோர் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 70 வீதமானவர்கள் இவ்வாறு பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
ஏனைய மாகாணங்களை விடவும் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய நாட்களாக பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்த பயணிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.