முதலாவது லொத்தர் சீட்டிலேயே 48 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்ற இளம் யுவதி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு ஒன்றாரியோவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.
18 வயது நிரம்பிய யுவதி, பாட்டியின் கோரிக்கைக்கு அமைய விளையாட்டாக லொத்தர் சீட்டு கொள்வனவு செய்துள்ளார்.
Juliette Lamour என்ற யுவதியே இவ்வாறு லொத்தர் சீட்டில் பரிசு வென்றெடுத்துள்ளார்.
லொத்தர் சீட்டு எவ்வாறு கொள்வனவு செய்வது என்பது பற்றி தந்தையிடம் கேட்டு தெரிந்து கொண்டதாகவும் முதல் சீட்டிலேயே இவ்வளவு பெரிய தொகை பரிசு வென்றெடுக்க கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.