சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கனடாவில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சீன உளவு பலூன் ஒன்று அமெரிக்க மற்றும் கனடிய வான் பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த பலூன் கனடாவின் வான் பரப்பு எல்லையை மீறி உட்பிரவேசத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த பலூன் விவகாரம் தொடரில் கனடாவின் உயர்மட்ட பாதுகாப்பு தரப்பினர் கூடி ஆராய்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலூனை சுட்டு வீழ்த்துவதற்கு பூரண ஆதரவினை வெளிப்படுத்துவதாக அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீன அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.