Home இந்தியா காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள்

காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள்

by Jey

உழவர் சந்தைகளுக்கு முன்பு சாலையோர காய்கறி கடைகளை அகற்றக்கோரி விவசாயிகள் நேற்று திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு உழவர் சந்தைகள், திருப்பூர் மாநகராட்சி காய்கறி சந்தை ஆகியவற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் தலைமையில் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்துக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் வடக்கு போலீசார் ஈடுபட்டனர். சப்-கலெக்டரிடம் கோரிக்கைகளை முறையிட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் வாசுகுமார், செல்வநாயகம், தங்கவேல்ராஜன், உழவர் சந்தை அதிகாரிகள், காவல்துறையினர் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முக்கிய நிர்வாகிகளை மட்டும் சப்-கலெக்டரிடம் முறையிட வருமாறு கூறினார்கள்.

ஆனால் விவசாயிகள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

related posts