காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மணமக்கள் பாஜக- அதிமுக போல் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்காமல், சுயமரியாதை சிந்தனையுடன் பெரியாரும்-பகுத்தறிவும் போல, பேரறிஞர் அண்ணாவும்-மாநில சுயாட்சியும் போல, கலைஞரும்-தமிழும் போல, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும்-திராவிட மாடல் ஆட்சியும் போல சிறப்பாக இணைந்திருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.