பிராம்டன் பகுதியில் நபர் ஒருவர் முதியவர்களை ஏமாற்றி பெருந்தகை பணம் அபசரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொத்தர் சீட்டில் பரிசு வென்றதாக தெரிவித்து முதியவர்களிடம் இந்த மோசடி இடம் பெற்றுள்ளது.
பல்வேறு நபர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சுமார் இரண்டு லட்சம் டாலர்கள் வரையில் முதியவர்களை ஏமாற்றி பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதுஃ
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்ஃ
பல மில்லியன் டாலர் பண பரிசு வாகன பரிசில் போன்றவை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்து வயோதிபர்களை இந்த நபர் ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27 வயதான நபரே இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர் என போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.