கனடாவின் யோக் பிராந்தியத்தில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி ஒன்பது மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து கொக்கெய்ன் போதை பொருள் மீட்கப்பட்டதாக யோக் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
போதை பொருளுக்கு மேலதிகமாக இந்த நபர்களிடமிருந்து 260000 டாலர் பணமும் சுமார் நூறாயிரம் டாலர் பெறுமதியான ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறிய பொதிகளில் அடைக்கப்பட்ட பெருந்தொகை போதைப் பொருள் இந்த சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, இந்த போதை பொருட்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.