கியூபக்கில் இடம்பெற்ற தீபத்து சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் லண்டன் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளடங்களாக ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்கள் அனைவரும் எட்டு வயதிற்கும் குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து குறித்து அறிவிக்கப்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது வீடு தீக்கிரையாகியிருந்த்து எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை.