ஐரோப்பிய நாடுகளில் பல வீடுகளில் சீனாவை சேர்ந்த இளம்பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்து வைக்கப்பட்ட தகவல் பற்றி யூரோபோல் போலீசாருக்கு சென்றுள்ளது. இதுபற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சட்ட அமலாக்க அமைப்பான யூரோபோல் நடத்திய அதிரடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. இதற்காக, 3 ஆண்டுகளாக ஆன்லைன் வழியே மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை அவர்கள் கண்காணித்தனர்.
இதில், இதுவரை பாதிக்கப்பட்ட 200 இளம்பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என யூரோபோல் தெரிவித்து உள்ளது. சீன இளம்பெண்களை ஆன்லைன் வழியே விளம்பரம் செய்து கவர்ந்து இழுத்து, ஐரோப்பிய ஓட்டல்களில் பணியமர்த்துகின்றனர்.
அதன்பின் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சுழற்சி முறையில் அவர்களை விபசாரத்தில் தள்ளுகின்றனர். நல்ல வேலை, சம்பளம் என நம்ப வைத்து ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி செல்லும் சீன இளம்பெண்கள் இறுதியில் விபசாரத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதற்காக சீனாவில் பிரபல தகவல் அனுப்பும் செயலிகளை குற்றவாளிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதன் வழியே இளம்பெண்களை அவர்கள் ஈர்த்து உள்ளனர்