Home உலகம் பிரதமர் புமியோ கிஷிடா அறுவை சிகிச்சைக்காக நேற்று அனுமதி

பிரதமர் புமியோ கிஷிடா அறுவை சிகிச்சைக்காக நேற்று அனுமதி

by Jey

ஜப்பானில் 2021-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருபவர் புமியோ கிஷிடா. 65 வயதான இவருக்கு நாட்பட்ட சைனசிடிஸ் பாதிப்பு இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மருந்துகள் மூலம் சைனடிசை குணப்படுத்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் சைனசிடிஸ் பாதிப்பால் மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டு வந்தார். இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தார்.

அதன்படி டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரதமர் புமியோ கிஷிடா அறுவை சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பின் புமியோ கிஷிடா நலமாக இருப்பதாகவும், நாளை (திங்கட்கிழமை) அவர் வழக்கம் போல் பணிக்கு திரும்புவார் என்றும் தலைமை மந்திரிசபை செயலர் ஹிரோகாசு மாட்சுனோ கூறினார்.முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புமியோ கிஷிடா கொரோனோ தொற்றுக்கு ஆளாகி, பின்னர் குணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

related posts