Home விளையாட்டு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி

by Jey

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன்களும், இந்தியா 400 ரன்களும் குவித்தது.

இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அஷ்வின் கும்பிளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- * ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நேற்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அவர் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 25-வது முறையாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கும்பிளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்து அவருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

சொந்த மண்ணில் இந்த வகையில் இவர்களை விட அதிகமாக இலங்கையின் முரளிதரன் 45 முறையும், ரங்கனா ஹெராத் 26 முறையும் 5 விக்கெட் வீழ்த்தி முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

related posts