தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இந்தியாவின் முதல் பார்முலா இ-ரேஸ் பந்தயம் நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் மற்றும் நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆனந்த் மகிந்திரா வீடியோ ஒன்றை பதிவிட்டு, வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஐதராபாத் இ-பிரிக்ஸ் பந்தயம் தவிர்த்து எனக்கு கிடைத்த உண்மையான போனஸ் என்னவென்றால், நாட்டு நாட்டு பாடலுக்கான ஸ்டெப் எப்படி போடுவது? என்பது பற்றி நடிகர் ராம்சரணிடம் இருந்து கற்று கொண்டேன்.
நன்றி மற்றும் ஆஸ்கார் விருது பெறுவதற்கு வாழ்த்துகள் எனது இனிய நண்பரே! என தெரிவித்து உள்ளார். இதற்கு ராம்சரண் பதிலுக்கு, ஜி என்னை விட விரைவாக ஸ்டெப்களை நீங்கள் போட்டுள்ளீர்கள்.
உங்களுடன் உரையாடிய அந்த தருணம் மகிழ்ச்சியானது. ஆர்.ஆர்.ஆர். பட குழுவினருக்கு வழங்கிய உங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.