சமஷ்டி அரசாங்கத்தின் சுகாதார நலக் கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாகாண முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிடோபா மாகாண முதல்வர் ஸ்டாஃபான்சன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீடு போதுமானது அல்ல அல்லது தங்களுக்கு தேவையான அளவு கிடையாது என்ற போதிலும் இந்த நிதி ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டஃபான்சன் மாகாண முதல்வர்கள் ஒன்றியத்தின் பேச்சாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
அண்மையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் மாகாண முதல்வர்கள் இந்த விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து மாகாண முதல்வர்கள் நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொண்டு ஒவ்வொருவரும் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர்.
நீண்ட கால அடிப்படையில் சுகாதார நலன்களை உறுதி செய்து கொள்வதற்கு தொடர்ச்சியாக சமஷ்டி அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.