Home இலங்கை விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை

விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை

by Jey

பதிவிடப்பட்டுள்ள விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு டொயோட்டா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இந்நாட்களில் டொயோட்டா வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி இலவச டொயோட்டா கார்கள், பரிசுகள் மற்றும் பெறுமதியான சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவிடப்பட்டுள்ள விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் போட்டிகள் டொயோட்டா லங்கா நிறுவனத்திற்கு தெரியாமல் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மற்றும் நபர்களால் மேற்கொள்ளப்படும் மோசடியான செயற்பாடுகளாகும் என டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தகைய அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் அல்லது நபர்களால் நடத்தப்படும் போட்டிகளுக்காக செய்யும் நிதி பரிவர்த்தனைகளுக்கு டொயோட்டா லங்கா நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்று நிறுவனம் மேலும் கூறுகிறது.

 

 

 

 

 

 

 

related posts