டொரன்டோ மேயர் ஜோன் டோரி அதிகாரப்பூர்வமாக தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
நகரசபை நிர்வாகத்திடம் இந்த பதவி விலகல் கடிதம் நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ஜோன் டோரி அறிவித்துள்ளார்.
பதவி வகித்த காலத்தில் குறிப்பாக கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் அலுவலக பணியாளர் ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்த சர்ச்சையை தொடர்ந்து டோரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
எனினும் நேற்றைய தினமே டோரி தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
தாம் இழைத்த தவறுக்காக டொரன்டோ மக்களிடமும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களிடமும் மன்னிப்புக்கு வருவதாக டோரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மக்கள் தமக்கு அளித்து வந்த ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டியுள்ளார்.