Home உலகம் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி-அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி-அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

by Jey

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்று கூறி அமெரிக்க செனட் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையில் தீர்மானத்தை மூன்று எம்.பி.க்கள் அறிமுகப்படுத்தினர்.

அதில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. நாங்கள் இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய நேர்மையை மதிக்கிறோம். சீனா தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தி எல்லைப் பகுதியில் நடத்து அத்துமீறல்களைக் கண்டிக்கிறோம்.

சீன அத்துமீறல்கள், அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெஃப் மார்க்லே, பில் ஹாகர்டி, ஜான் கார்னின் ஆகியோர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

related posts