Home உலகம் இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம்

by Jey

இன்று இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்ப்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

related posts