Home இலக்கியம் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே – டக்ளஸ் தேவானந்தா முடிவுகளை எடுக்கவேண்டும்

மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே – டக்ளஸ் தேவானந்தா முடிவுகளை எடுக்கவேண்டும்

by Jey

குறுகிய நோக்கங்களுக்காகக் வாதங்களை விடுத்து மீனவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கடற்தொழில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இழுவைப்படகுகள் வடபகுதி கடற் பிரதேசத்திலே மீன்பிடிப்பதற்கான பாஸ் அனுமதி வழங்கவுள்ளதாக வெளியாகத் தகவலை தொடர்ந்தே என்.இன்பநாயகம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடற்தொழில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தைக் கண்டும் காணமால் இருந்தால் அது வடக்கு – கிழக்கு மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும்.

தற்போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி செய்கின்றது என்பதற்காக, வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரம் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் இன்பநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

 

 

related posts