Home இலங்கை வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் – ஜனாதிபதி

வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் – ஜனாதிபதி

by Jey

வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக நேற்று (16.02.2023) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts