திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சென்னை நகர குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றான சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. ரூ.65 லட்சம் செலவில் 1939-ல் இந்த நீர்த்தேக்க கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி இந்த நீர்த்தேக்கத்தை கட்ட பெரும் முயற்சிகள் மேற்கொண்டதால் இந்த நீர்தேக்கத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. தற்போது பூண்டி ஏரி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. 8 ஆயிரத்து 458 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நீர் தேக்கத்தின் உயரம் 35 அடி ஆகும்.
இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். வீணாக கடலில் கலக்கிறது இந்த நீர்த்தக்கத்தில் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
மேலும் நீர்த்தேக்கம் முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும்.