Home இலங்கை கோழிப்பண்ணை தொழில் சார்ந்த பொருட்களில் சரிவு

கோழிப்பண்ணை தொழில் சார்ந்த பொருட்களில் சரிவு

by Jey

இலங்கையில் எதிர்வரும் ஆறு மாதங்களில் கோழி உற்பத்தி தொழிற்துறை வழமைக்குத் திரும்பும் என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில், கால்நடை தீவன தட்டுப்பாடு, தாய் விலங்குகள் இறக்குமதி நிறுத்தம், உரம் தட்டுப்பாட்டால் உள்நாட்டில் சோள உற்பத்தி சரிவு, சோளம் இறக்குமதி இடைநிறுத்தம் போன்ற காரணங்களால் கோழிப்பண்ணை தொழில் சார்ந்த பொருட்களில் சரிவு ஏற்பட்டது.

எனினும், கடந்த வருட இறுதிக்குள் 36,000 முட்டையிடும் கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டுக்குத் தேவையான அளவு அரிசி கையிருப்பு உள்ளது. இதன் காரணமாகப் பழைய அரிசி மற்றும் நெல் இருப்புக்களைக் கால்நடை தீவனமாகப் பயன்படுத்த முடியும் என்பதனால் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தனியார்த் துறை பண்ணைகளில் தற்போது சுமார் 15 இலட்சம் கோழிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts