Home இந்தியா வருடம் தோறும் அமர்நாத் பனிலிங்க தரிசனம்

வருடம் தோறும் அமர்நாத் பனிலிங்க தரிசனம்

by Jey

பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், வருடம் தோறும் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த வருடமும் பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில் 87-வது மகா சிவராத்திரியை முன்னிட்டு, அமர்நாத் பனிலிங்க தரிசனம் காஞ்சீபுரம் ஜெம் நகர் டி.எஸ்.பி. திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா நிர்வாகிகள் சகோதரி அகிலா, ராஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பக்தர்களை வரவேற்றனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு பனிலிங்க தரிசனத்தை தொடங்கி வைத்தார். அமர்நாத் பனிலிங்கம் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருப்பதாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் ராஜயோக தியான பட விளக்க காட்சியும், தியான அறையும் பொதுமக்களை கவர்ந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்யலாம்.

related posts