சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் புதிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் வான்பரப்பில் அத்துமீறி சீனாவின் உளவு பலூன் பறந்தது என்ற விவகாரம் கடந்த வாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டது.
எனினும், அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்து உள்ளது என சீனா கூறியது. எனினும், இதனை உளவு பலூன் என்றே அமெரிக்கா கூறி வருகிறது.
தொடர்ந்து அதனை சுட்டு வீழ்த்தியது. அதன் பாகங்களை கைப்பற்றி ஆய்வும் செய்து வருகிறது.
தொடர்ந்து 2-வது முறையாக அத்துமீறிய மர்ம பொருளையும் வாஷிங்டன் சுட்டு வீழ்த்தியது. உலகம் முழுவதும் 5 கண்டங்கள் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறி இதுபோன்ற உளவு பலூன் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருகிறது என்றும் சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை சுமத்தியது. அமெரிக்காவின் இந்த செயல் சீனாவுடனான உறவை பாதிப்பிற்குள்ளாக்கி இருக்கிறது என்றே சீனா பதிலாக தெரிவித்தது.